Sunday, February 10, 2013

நம் நேதாஜி!! Nethaji Subash Chandra Bose!!!


வீரத்தின் விளைநிலமாய்…
விவேகத்தின் தலைமகனாய்… – நாம் 
நேசிக்கின்ற பாரதத்தை
சுவாசிக்கப் பிறந்தவன் நம் நேதாஜி!!

வெள்ளையனின் வஞ்சந்தனை வீழ்த்த… –
 இந்தியனின்
அச்சந்தனை சாகடிக்க… – அந்நியனை 
துச்சமென மிதிக்க… –
இந்திய தேசியப் படைதனை
நிறுவியவன் நம் நேதாஜி!!

வேற்று நாட்டிலும்
வெள்ளையனை எதிர்க்க…
இளைஞர்கள் படை அமைத்து 
இளைஞர்களுக்கு வழிகாட்டியவன்
 நம் நேதாஜி!!

இன்றும் நெஞ்சில் உரமிக்க 
இளைஞர்களின் நெஞ்சமெங்கும்
நிறைந்திருக்கிறான் நம் நேதாஜி!!

No comments:

Post a Comment